Translate மொழி பெயர்ப்பு

Thursday, June 30, 2016

இப்போது சில நாள்களுக்கு முன்

இப்போது சில நாள்களுக்கு முன் (ஜூன் 25), சென்னை உயர்நீதிமன்றத்தில், விடுதலை கோரி நளினி அளித்திருந்த மனுவிற்குப் பதில் மனு (counter) அளித்த தமிழக அரசு, அவர் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. 
இப்போதும் தமிழகத்தின் முதலமைச்சர் அதே ஜெயலலிதாதான். பிறகு ஏன் இந்த மாற்றம்? 

மலையிலிருந்து மடுவில் குதித்திருப்பதன் நோக்கம் என்ன? 

இந்தப் 'பச்சை இரட்டை வேடத்தை' எவரும் கண்டிக்கவில்லையே என்? 

இவ்வாறு பல வினாக்கள் எழுகின்றன. விடுதலை செய்யப்போவதாக அவர் அறிவித்த நேரம், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருந்த கால கட்டம். 

தமிழ்த் தேசியவாதிகள் அந்த அறிவிப்பில் மகிழ்ந்து அறிக்கை விட்டனர். 

25 ஆண்டுகளாகத் தான் பிள்ளையைப் பிரிந்து வாடும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மா, ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னார். அந்த நிழற்படம் ஊடகங்களுக்குச் சென்றது. சுவரொட்டியாகவும் மாறி, அ.தி.மு.க.விற்கு ஆதரவைப் பெருக்கியது.

ஆனால் விடுதலை மட்டும் வரவே இல்லை. என்ன காரணம்? 


மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் (Cr.P.C) 435(1) ஆம் பிரிவின் கீழ் விடுதலை செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். 

அந்தச் சட்டப் பிரிவில், "மத்திய அரசுடன் கலந்துரையாடி (in consultation with...)என்று ஒரு தொடர் உள்ளது. கலந்துரையாடல் என்றால் மத்திய அரசுக்கு அறிவித்தல்தான் என்றனர் வழக்கறிஞர்கள் சிலர். ஆனால் அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. உச்சநீதி மன்றத்திற்குச் சென்று, எங்களைக் கேட்காமல் விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று மனு அளித்தது. 

No comments:

Post a Comment